முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி, சென்னையில் வாக்களித்தனர்

திமுக தலைவரும் முதமைச்சருமான மு. க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

SIET கல்லூரி வளாக வாக்குசாவடியில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறுகையில், “நான் எனது உரிமையை பயன்படுத்தியதைப் போல, எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்; அது முக்கியம்.தமிழ்நாடு வெல்லும்” என்று கூறினார்.
சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி , அவரது மனைவி கிருத்திகா, மகன் இன்பநிதி ஆகியோருடன் சேர்ந்து வாக்களித்தார்.

கிருத்திகா கூறுகையில் “கடந்த 25 வருஷமா வாக்களிக்கிறேன். என் மகன் முதல் முறையா வாக்களிக்கிறான்” என்றார்.







