கோவில்பட்டியில் இலவச ஆக்கி பயிற்சி முகாம் தொடக்கம்


கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகத்தின் சார்பாக 29 வது ஆண்டு கோடைகால இலவச ஆக்கி பயிற்சி முகாம் இன்று (ஏப்ரல் 18)காலை தொடங்கியது
இந்திய ஆக்கி வீரர் கார்த்தி வீரர்களுக்கு பயிற்சி அளித்து இளம் வீரர்களுக்கு நுணுக்கங்களை கற்றுத் தந்தார்

இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தொடர்ந்து காலையும் மாலையும் பயிற்சி முகாம் நடைபெறும்.
தினமும் காலை பயிற்சிக்கு பின் முட்டை, பால், பயிர் வகைகள் மற்றும் மாலை வேளைகளில் பழம், டீ, பிஸ்கட் போன்றவை தவழங்கப்படும்.
மேலும் முன்னாள் இந்திய ஆக்கி வீரர்கள் முகமது ரியாஸ், திருமாவளவன், அஸ்வின், மாரீஸ்வரன், மற்றும் மனநல நிபுணர் பாலாஜி , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆக்கி பயிற்சியாளர்கள் முத்துக்குமார், ஹானஸ்ட் ராஜ், பயிற்சி அளிக்க இருக்கிறார்கள்.
பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் டீ-சர்ட், சான்றிதழ், வழங்கப்படும்.

இந்த கோடைகால பயிற்சி முகாமில் 86 வீரர்கள் கலந்து கொண்டு பயனடைகிறார்கள்
பயிற்சி முகாம் ஏற்பாடுகளை ராஜீவ் காந்தி விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் குரு சித்ர சண்முக பாரதி, காளிமுத்து பாண்டியராஜா, வேல்முருகன், மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.







