கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம் ; பக்தர்கள் குவிந்தனர்



கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாதசுவாமி கோவில் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் நடக்கும் விழாக்களில் பங்குனி பெருந்திருவிழா மிகவும் முக்கியமானதாகும்.
11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்பார்கள்.
இந்த ஆண்டு பங்குனி பெருந்திருவிழா கடந்த 5 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிகாலையில் நடை திறந்ததும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. விசேஷ பூஜைகளுக்கு பிறகு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கொடியேற்றப்பட்டது
தினமும் காலை மாலை வேளைகளில் கோவிலில் சிறப்பு பூசைகள நடைபெற்று வருகிறது. மாலையில் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி மற்றும் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது,.
நேற்று திருவிழாவின் 8 வது நாள் 1இரவு குதிரை மற்றும் கிளி வாகனங்களில் சுவாமி, ampaal வீதி உலா நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்களை கவரும் வகையில் கோவிலை சுற்றியும் ஏராளமான திடீர் கடைகள் உருவாக்கி உள்ளன,.மேலும் கோவில் மைதனத்தில் விதவிதமான ராட்டினங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் கொவிலப்ட்டி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 9வது நாளான இன்று திங்கட்கிழமை தேரோட்டம்,நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பகதர்கள் கூடி இருந்தனர், காலையில் அம்பாள் தேர் வடம் பிடித்து இழுத்து செல்லப்பட்டது. பின்னர் சுவாமி தேர் இழுத்து செல்லப்பட்டது.
பக்தர்கள் கரகோஷம் முழங்க தேர் நான்கு வீதிகளையும் கடந்து அடுத்தடுத்து கோவில் நிலையை அடைந்தது, தேரோட்டத்தை யோட்டி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பக்தர்கள் தாகம் தணிக்கும் வைகையில் நீர்மோர் பந்தல்கள் அமைத்து இருந்தனர்,

தேரோட்ட் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, நகராட்சி தலைவர் கருணாநிதி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவில் அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்,
நாளை 10வது நாள் தீர்த்தவாரி, 11-வது நாள் தெப்பத் திருவிழா நடைபெற இருக்கிறது, இந்த நாட்களில் கூட்டம் அதிகம் வரும் என்பதால் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், பெண்களிடம் அத்துமீறும் கும்பலை பிடிக்க சாதாரண உடை அணிந்த போலீசார் ரோந்து சுற்றி வர ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது..







