36 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்
கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில்,தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளி பயனாளிகள் 36 பேருக்கு ஸ்கூட்டர் வழங்கினார். விழாவில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமன்சூ மங்கல்,நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஆணையாளர் சுகந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரம்மநாயகம், திமுக நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்







