நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்; முக்கிய அறிவிப்புகள் விவரம்
நாடாளுமன்ற மக்களவையில் இன்று(பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார். இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
*ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வருகிறது.
*திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய டிசம்பரிலிருந்து மார்ச் வரை கால நீட்டிப்பு செய்யப்படுகிறது.
*வருமான வரி தாக்கல் செய்யும்போது பொய் கணக்கு காட்டினாலோ, தவறான தரவுகள் வழங்கினாலோ 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்

*வருமான வரி தாக்கல் தொடர்பான சிறிய குற்றங்களுக்கு கிரிமினல் வழக்கு கிடையாது.
*மோட்டார் வாகன விபத்துகளுக்காக வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைகளுக்கு வருமான வரியிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.
* வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான அசையா சொத்து வரி குறைப்பு
*மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதமாகவே தொடரும்.
* மாநிலங்களுக்கான நிதிப்பகிர்விற்கு ரூ.1.4 லட்சம் கோடி விடுவிக்கப்படும்.
மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம்
*தமிழ்நாட்டின் பொதுகைமலை, இமாச்சலபிரதேசம், உத்தரகாண்ட், ஜம்முவில் மலையேற்ற சுற்றுலாவை (டிரக்கிங்க்) ஊக்
*செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்படும். செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு

* பிரத்யேக ரசாயன பூங்காக்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.
*அரியவகை கனிமம் எடுப்பதற்கான புதிய வழித்தட திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, கேரளாவுக்கு அறிமுகம்.
*விளையாட்டு உபகரணங்கள் உற்பத்திக்கு புதிய திட்டம் செயல்படுத்தப்படும். குவிக்க திட்டம் அமல்படுத்தப்படும்
* நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய தொழில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.
** காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த ‘மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்.

*மாநிலங்களுடன் இணைந்து பிரத்யேக கெமிக்கல் பூங்கா அமைக்கப்படும்.
உயிரி மருத்துவ திட்டங்கள்
*பயோ பார்மா எனப்படும் உயிரி மருத்துவ திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
*சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
*சர்வதேச அளவில் ஜவுளித்துறையில் இந்தியா போட்டிபோட புதிய திட்டங்கள்
*ஜவுளித்துறை சார்ந்த திறன்களை வளர்த்தெடுக்க, தொழிற்துறை, கல்வித்துறை இடையே ஒருங்கிணைப்பு
*இயற்கை நூல் உற்பத்திக்கு புதிய திட்டம்; பருத்தி, பட்டு கம்பளி நூல் உற்பத்திக்கு திட்டம்
*புதிய மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்
*முக்கிய நகரங்களில் தலா ரூ.5,000 கோடி முதலீட்டில் நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.
*புதிய தேசிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்; இதற்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு
* மும்பை – பூனே, ஐதராபாத் சென்னை, புனே – ஐதராபாத் இடையே அதிவிரைவு ரெயில் தடங்கள் உருவாக்கப்படும்
கோவில் நகரங்கள்
*கோயில் நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
* பொதிகை மலையில் சுற்றுச்சுழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்
**உலக சுகாதார நிறுவனத்தின் பாரம்பரிய மருந்துகள் ஆராய்ச்சி மையம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைக்கப்படும்

* 3 புதிய ஆயுர்வேத கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்
* வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம்
* மாவட்டந்தோறும் மாணவிகளுக்கான விடுதிகள் அமைக்கப்படும்
* இந்தியவில் அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள். 10 சதவீதம் ஆக உள்ள முதலீடு வரம்பு, 24 சதவீதம் ஆக அதிகரிக்கப்படுகிறது
ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்
* தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம் அமைக்கப்படும்
* பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்
* பொதிகை மலை, இமாச்சல், ஜம்மு காஷ்மீரில் டிரக்கிங் சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
* கடலோர பகுதிகளில் தேங்காய் சாகுபடியை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். தென்னை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பட்டுப்போன தென்னை மரங்களை நீக்கி புதிய மரங்கள் நட திட்டம்
*சென்னை பெங்களூரு, சென்னை ஐதராபாத் இடையே அதிவேக ரெயில் வழித்தடம் அமைக்கப்படும்
*எலக்ட்ரானிக் துறையை ஊக்குவிக்க ரூ. 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
*2026-27ம் நிதியாண்டுக்கான மூலதன செலவு ரூ. 12.20 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
கண்டெய்னர்கள் உற்பத்தி
*கண்டெய்னர்கள் உற்பத்தியை அதிகரிக்க ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*2026-27ம் நிதியாண்டுக்கான மூலதன செலவு ரூ. 12.20 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
*நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும். பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு மாவடத்திலும் பெண்களுக்காக விடுதிகள் அமைக்கப்படும்.
*தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,ஒடிசாவில் அரிய வகை தாது வழித்தடங்கள் அமைக்கப்படும்
*காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களை வலுப்படுத்த மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும்
*செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
மேற்ககண்டவை உள்பட மேலும் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன,.







