கல்லூரி வளாக விநாயகர் கோவில் 22வது ஆண்டு வருஷாபிஷேகம்
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் வளாகத்தில் அமைந்துள்ள கல்வி விநாயகர் கோவிலின் 22-வது ஆண்டு வருஷாபிஷேகம் நேற்று 31.01.2026 சனிக்கிழமை நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு யாகத்துடன் தொடங்கி நன்னீராட்டுடன் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றன. இதில் கல்லூரிச் செயலர் . ப.மகேந்திரன், முதல்வர் மூ.சுப்புலெட்சுமி சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் .பா.மகேஷ்குமார், தன்னாட்சிக்குழு உறுப்பினர் . கணேஷ்ராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







