கனிமொழி எம்.பி.பிறந்தநாள்: நலத்திட்ட உதவிகள்
கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக திமுக துணை பொதுச்செயலாளரும்,தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு ஒன்றிய திமுக அலுவலகம் நாலாட்டின்புத்தூரில் வைத்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன..

விழாவிற்கு திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ப்ரியா குருராஜ், ஒன்றிய அவைத்தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய துணைச் செயலாளர் சாந்தி,மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் மேனகா, விஜயலட்சுமி, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தாமோதரக்கண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை, கிளைச் செயலாளர்கள் புவனேஷ்குமார்,காளிமுத்து, முத்துராமலிங்கம், ரங்கராஜ்,பாலாஜி, கற்பகராஜா மற்றும் மகளிரணியினர் கலந்துகொண்டனர்







