கோவில்பட்டி கல்லூரியில் ‘பிராண சிகிச்சை’ விழிப்புணர்வு, துறைகளுக்கு இடையேயான திறன்சார்ந்த போட்டிகள்
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இளைஞர் நலச் சங்கம் இணைந்து ‘பிராண சிகிச்சை’ பற்றிய விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின.
கல்லூரிச் செயலர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி, GMCKS பிராண சிகிச்சை மற்றும் அர்ஹாடிக் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர்களான சங்கீதா, சொர்ணலதா, நாகநந்தினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

வேதியியல் துறைத்தலைவரும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியுமான பா.உமாதேவி வாழ்த்துரை வழங்கினார். சங்கீதா சூப்பர் மூளை யோகா மற்றும் இருதய தியானம் பற்றி சிறப்புரையாற்றி மாணவர்களிடையே பிராண சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தார். நம் உடல், மனம் நலமாக இருந்தால் உறவுகள் சீராக அமையும் என்று எடுத்துரைத்தார்.
இப்பயிற்சியில் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினர்களான 100 மாணவர்கள் பல்துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும் இளைஞர் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ச.ஜெயகுரும்பன் நன்றி கூறினர்.
இவ்விழிப்புணர்விற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறை உதவிப்பேராசிரியரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான நா.சண்முகப்பிரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும் இளைஞர் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான ச.ஜெயகுரும்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் இரா.கிருஷ்ணவேணி, கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் பா.இசக்கியம்மாள், கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் சீ.மகேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
துறைகளுக்கு இடையேயான திறன்சார்ந்த போட்டிகள்


கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு (தன்னாட்சி) கல்லூரியின் ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றம் து துறைகளுக்கு இடையேயான திறன்சார்ந்த போட்டிகள் டேலண்ட்ஃபெஸ்ட் -2025″ டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடத்தின.
தொடக்கவிழா நிகழ்ச்சியில் கல்லூரி செயலர் மகேந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்கள். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் மகேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார்..
இரண்டு நாள் கலாச்சார நிகழ்ச்சிகளில் வினாடி வினா, நடனம், மைம், ஸ்கிட், பாடல், மற்றும் படைப்பு எழுதுதல் ஆகியவை நடைபெற்றன. 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதிக மதிப்பெண் பெற்று முதலாம் இடத்திற்கான சுழற்கோப்பையை கணினி பயன்பாட்டுத் துறை மாணவர்கள் பெற்றனர் இரண்டாம் இடத்திற்கான சுழறகோப்பையை புள்ளியியல் துறை மாணவர்கள் பெற்றனர்.

கல்லூரிச் செயலர், முதல்வர், சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குநர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மாணவப் பிரதிநிதிகள் விக்டோரியா அனி, மதன் பிரசாத், ஜெயச்சித்ரா, கிஷ்ணா, சத்யா, ஜெனிபர், அஜிதா மற்றும் இதர மாணவ மாணவியர்கள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா. சரவண செல்வகுமார் நன்றி கூறினார்.







