கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கிரிக்கெட் போட்டி
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.தலைவர் ராஜ்குமார் தலைமையில்
மாவட்ட உதவி ஆளுநர்
பரமேஸ்வரன் முன்னிலையில் செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார்.

போட்டியை மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் தொடங்கிவைத்தார்.
ரோட்டரி உறுப்பினர்கள்4 அணிகளாக விளையாடினர். வெற்றி பெற்ற அணிக்கு பதக்கமும்கோப்பையும் வழங்கப்பட்டது. முடிவில்மணிகண்டன் நன்றி தெரிவித்தார்.







