தியாகி விஸ்வநாத தாஸ் நினைவு தினம்; கோவில்பட்டியில் புகழஞ்சலி

தியாகி விஸ்வநாத தாஸ் இந்திய விடுதலை போராட்ட வீரர் விடுதலை போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களை எதிர்த்து நாடகங்கள் நடத்தி மக்களிடம் சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர். சுதந்திரத்திற்காக வீரமுடன் போராடியதால் வீரத் தியாகி விஸ்வநாத தாஸ் என்று அழைக்கப்பட்டார்.
ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து இவர் எழுதிய “பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது” என்ற பாடல் விடுதலை போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது.

இவரது நாடகங்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து தடை விதித்து வந்தது.
காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
அவரது நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை கோவில்பட்டி ESI மருத்துவமனை அருகில் அவரது உருவப் பட்டத்திற்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் விஸ்வநாத தாஸ் பேரவை சார்பாக புகழஞ்சலி செலுத்தப்பட்டது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமை தாங்கினார்.. விஸ்வநாத தாஸ் பேரவை சங்கர், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, பாலாஜி, மோகன், இம்ரான், பீட்டர் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் அபிராமிமுருகன் காங்கிரஸ் கட்சி BSNL துரைராஜ், INTUC ராஜசேகரன், அருண்பாண்டியன், பழனிச்சாமி நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மகராஜன் மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார், தமிழ்நாடு காமராஜ் பேரவை நாஞ்சில்குமார் பகத்சிங் இரத்ததானக்கழகம் காளிதாஸ், லட்சுமணன் வேல்முருகன் தியாகி விஸ்வநாத தாஸ் பேரவை நிர்வாகிகள் மாடசாமி, கனகராஜ், பூமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்







