காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக மாவட்ட தலைமை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து (முட்டை,பயறு வகைகள்,சத்துமாவு ) பெட்டகம் வழங்கப்பட்டது.

ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமையில் இணை செயலாளர் ரத்தினகுமார் சார்பாக 30க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. ரோட்டரி உறுப்பினர்கள் ரியல் எஸ்டேட் கண்ணன்,பூல்பாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் நன்றி கூறினார்.







