மார்த்தாண்டம் ஜே.சி.ஐ.தலைவர் அனுஜ், நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஜேசிஐ (ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் ) அமைப்பின் 21 வது ஆண்டு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அனுஜ் மோன் செல்வன் மற்றும் நிர்வாகிகள் அடங்கிய ஆட்சி மன்ற குழு பதவி ஏற்பு விழா நடைபெற்றது, மார்த்தாண்டம் ஆட்டூர் சி.எஸ்.ஐ.கம்யூனிட்டி ஹால் மண்டபத்தில் விழா நடந்தது.
புதிய தலைவர் அனுஜ் மோன் செல்வனுக்கு முந்தைய ஆண்டின் தலைவராக இருந்த அனுசியாஜான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன் அடையாளமாக `காலர் ‘மற்றும் `கேவல் ‘ஆகியவற்றை வழங்கினார்.முன்னதாக ஜே.சி,ஐ.உறுதிமொழி எடுத்துகொண்டார்.

தொடர்ந்து மற்ற நிர்வாகிகளுக்கு தலைவர் அனுஜ் மோன் செல்வன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்,.செயலாளராக தருண், பொருளாளராக வின்சல், துணை தலைவர்களாக அபி, ராஜா ரெக்சின், அஜய்லின்,அஜின், அந்தோணிராஜ், தீபா பிலெஸ்ஸி, இயக்குனர்களாக ஆன்சி பியானா, ஜிஜு சூரியா,ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்,
மேலும் ஜே.காம் ஒருங்கிணைப்பாளராக ஆரோக்கிய ஜான், ஜே.ஏ.சி.ஒருங்கினைபாலராக அஜித் ஆகியோர் பதவி ஏற்றனர்,.
ஜே சி ஐ கடந்த ஆண்டின் தலைவர் ரெகேஷ் சர்மா, கடந்த ஆண்டு மண்டல தலைவர் ஷிபி, இந்த ஆண்டின் தலைவர் கார்த்திக் போஸ், துணைத் தலைவர் அனிசியா ஜான், ஜே. ஏ. சி. மண்டல சேர்மன் பிரகாஷ் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்







