சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை; வாடகை கார் உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சொந்த காரை வாடகைக்கு பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடகை கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்,
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்க தூத்துக்குடி செயலாளர் ரவீந்திரன் மாநில செய்தி தொடர்பாளர் வேல்முருகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜெய்சங்கர், ஆலோசகர்கள் சக்திவேல், வேல்முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ், பொருளாளர் வினோத் செல்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் கிரிஜா வை சந்தித்து புகார் கூறினார்கள். ,

மேலும் அவர்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் சொந்த பயன்பாட்டு கார்களில் அதிக எண்ணிக்கையில் பள்ளி சிறார்களை ஏற்றிச் செல்கின்றனர். அவர்கள் மீது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சொந்த பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட கார்களை சிலர் இணையதளங்கள், இன்ஸ்டாகிராம், முகநூல் ரீல்ஸ் மூலமாக தனி நபர்களுக்கு நாள் வாடகைக்கு விடுகின்றனர்.
இதனால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, முறையாக அரசின் விதிமுறைகள் பின்பற்றும் சுற்றுலா கார் உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.

தற்போது பலர் சொந்த பயன்பாட்டு கார்களை வாடகைக்கு விடுகின்றனர். எனவே, மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாகவும் அரசுக்கு வரி வருவாய் இழப்பை ஏற்படும் இணையதளங்கள் உள்ளிட்டவைகளை முடக்க வேண்டும்.
சொந்த கார்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

மேற்கண்ட எங்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆட்டோ, சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் என அனைவரையும் ஒன்று திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.







