கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு உருவச்சிலை; முதலமைச்சரிடம் கோரிக்கை மனு
தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கத்தின் கோவில்பட்டி மண்டல தலைவர் ஆர்.செல்வராஜ் கையெழுத்திட்ட மனுக்கள் நேற்று இரவு கோவில்பட்டி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அந்த மனுக்களில் கூறப்பட்டு இருந்ததாவது:-
கோவை அவினாசி சாலையில் கட்டப்பட்டுள்ள 10.1கி.மீ உயர்மட்ட மேம்பாலத்திற்கு தமிழ்நாடு மற்றும் கோவை கம்மவார் நாயுடு சமுதாயத்தின் கோரிக்கையை ஏற்று தென்னகத்தின் அறிவியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பெயரைச் சூட்டியது. சமுதாய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு கம்மவார் நாயுடு சமுதாய மக்களை ஒட்டுமொத்தமாக மகிழ்வித்த முதலமைச்சருக்குக்கு தமிழ்நாடு கம்மவார் நாயுடு மக்கள் சார்பாகவும் மற்றும் எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றியையும் பாராட்டுகளையும் சமர்ப்பிக்கிறோம்.

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு தமிழக விவசாயிகளின் நலனுக்காக போராடி களம் பல கண்டவர். தமது களப்பணியின் போது இறுதியாக உயர்நீத்த இடம் கோவில்பட்டி ஆகும். எனவே மறைந்த அந்த விவசாய பெருமகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவில்பட்டியில் முழு உருவ வெண்கல சிலை அமைக்கும்படி முதலமைச்சரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இளையரசனேந்தல் பிர்காவில் உள்ள 12 ஊராட்சிகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றித்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திருநெல்வேலியிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை வரை செல்லும் மங்கம்மா சாலை, 100க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை இணைக்கிறது. திருநெல்வேலி, வேப்பன்குளம், JP நெல்லைப்பட்டணம், தென்கலம் விளக்கு பள்ளமடை, பிள்ளையார்குளம், கட்டாரங்குளம், மேலஇலந்தைகுளம், பன்னிருத்து, சுண்டங்குறிச்சி, மூவிருந்தாளி, அச்சம்பட்டி, கருப்பனூத்து, மடத்துப்பட்டி ஆகிய ஊர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

, சாயமலை, இராமலிங்கப்பட்டி சிவகாமிபுரம் விளக்கு, அழகப்பசாமி கோவில், அழகுநாச்சியார்புரம், அன்னபூரணியாபுரம், நாலுவாசன்கோட்டை, சின்னவாகை குளம், கள்ளிகுளம் விளக்கு, செட்டிகுளம், ஆலமநாயக்கன்பட்டி, ஏ.கரிசல்குளம் கலிங்கப்பட்டி, வடகரை கொரக்கான்பட்டி ஆகிய ஊர்கள் தென்காசி மாவட்டத்திலும் உள்ளன.
மேற்கண்ட அனைத்து கிராமங்களையும் இணைத்து சீரமைப்பது மூலம் இதனை சார்ந்துள்ள கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தை நம்பியே உள்ளதால் விவசாயமும் வளர்ச்சியடைய உதவும். எனவே அரசு இதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்,
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.







