காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பொருட்கள்; ரோட்டரி சங்கம் வழங்கியது
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் காசநோய் பயனாளிகளுக்கு ஊட்டசத்து பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட உதவி ஆளுநர் முத்துச்செல்வம் முன்னிலை வகித்தார்.

35 காசநோய் பயனாளிகளுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு வழங்கப்பட்டது. செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார். கண்ணன்,இளங்கோ,பூல்பாண்டி,ரத்தினகுமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்,
கருத்தரங்கம்

கோவில்பட்டி வ. உ .சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் திறன் மேம்பாடு மற்றும் அடுத்த செயல்முறைகள் முன்னேற்றம் குறித்த ப்ராஜெக்ட் கலாம் கருத்தரங்கம் நடைபெற்றது.
ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் தலைமை வழங்கினார். தலைவர் ராஜ்குமார், முன்னாள் மாவட்ட உதவி ஆளுநர் பாபு, ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனி குமார் அனைவரையும் வரவேற்றார். உறுப்பினர்கள் மணி, பூல்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்,







