கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு கூட்டம்
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் ச.சங்கர் கணேஷ் வரவேற்று பேசினார்.. முதல்வரும் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவருமான மூ.சுப்புலெட்சுமி தலைமையுரை ஆற்றினார். துணைத் தலைவர் ஆர்.கருப்பசாமி, கூடுதல் துணைத் தலைவர் வி.இராமசுப்ரமணியன், இணைச் செயலாளர் திபொ.பொன்ஸ்ரீராம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் திரு. வி.எஸ்.பாபு, ப.பாலசுப்பிரமணியன் மற்றும் திரு.ஆர்.சுனையரசன் ஆகியோர் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்கள்.
முன்னாள் மாணவர் சங்கத்தின் வரவு செலவு அறிக்கையினை சங்கத்தின் பொருளாளர் சு.பாலா சமர்ப்பித்தார். சங்கத்தின் ஆண்டறிக்கை மற்றும் தீர்மானங்களை செயலாளர் ரா.கவிதாமஞ்சு வாசித்தார். அனைவரின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இணைச் செயலாளர் சா.சிவசக்தி கல்வி உதவித் தொகைப் பெயர்ப்பட்டியலை வாசித்தார். சங்கத்தின் துணைத்தலைவரும் ரோஸ் மேட்ச்சஸ் உரிமையாளருமான. ஆர்.கருப்பசாமி மற்றும் அவரது துணைவியார் சாராவதி கருப்பசாமி ஆகியோர் கல்வியில் சிறந்த 16 மாணவ, மாணவியர்களுக்கு நன்கொடையாக வழங்கிய ரூ.60,000/- கல்வி ஊக்கத் தொகையினை பகிர்ந்து காசோலையாக வழங்கினார்கள். நிர்வாகக்குழு உறுப்பினர் செ.வினாயஸ்ரீ நன்றி கூறினார்.
இலவச பல் மருத்துவ முகாம்

கோ.வெங்கடசுவாமி கல்லூரியில் ஆரோக்கியக்கழகத்தின் சார்பாக கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி ‘இலவச பல் மருத்துவ ஆலோசனை முகாம்’ 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி, சுயநிதிப்பாடப் பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஸ்குமார் ஆகியோர் தலைமையேற்று முகாமை தொடங்கி வைத்தனர். டாக்டர் சென்னகேசவன் பல்மருத்துவமனையின் பல் மருத்துவர்கள் வே.வெங்கடேசன், க.வேல் விக்னேஸ்வரி ஆகியோர் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பல் பரிசோதனை செய்து அறிவுரைகள் வழங்கினர்.
முகாமில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்களும் 10க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆரோக்கியக்கழக ஒருங்கிணைப்பாளரும் விலங்கியல் துறைத்தலைவருமான ரா.சோனியா மற்றும் மின்னியல் துறை உதவிப்பேராசிரியர் ஜெயப்ரியா ஆகியோர் செய்திருந்தார்.







