கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி பள்ளி மாணவிகள் கபடி போட்டியில் சாதனை
முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி அளவிலான மகளிர் கபடி போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
இதே போல் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் 17 வயதுக்கு உட்பட்ட மகளிர் கபடி போட்டி கோவில்பட்டி செவன்த்டே மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

அப்போட்டியில் கோவில்பட்டி, காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெண்கலப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
கபடி போட்டியில் பங்கேற்ற மாணவிகளையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் முனைவர் கரிகாலன் ஆகியோரையும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்







