இமானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவிப்பு
இந்திய விடுதலை போராட்டம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து சிறைசென்றவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவருமான, சமூக நீதி போராளி தியாகி இமானுவேல் சேகரனார் 68வது நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தில் அமைந்துள்ள அன்னாரது உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் துரைராஜ், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.







