உரிமைகளுக்காக போராடி வீரமரணம்: மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு நாளில் அஞ்சலி

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடி வீரமரணம் அடைந்த போராளிகளின் நினைவு நாளையொட்டி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

நெல்லை தாமிரபரணி ஆற்றில் இந்திய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா மாநில அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பாலமுருகன் செயலாளர் போத்திராஜ் அமைப்புச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் வர்த்தக அணி செயலாளர் கண்ணதாசன் பொருளாளர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்







