போராட்டத்தில் உயிர்இழந்த தியாகிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் நினைவுத்தூண்; மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்

ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி தாமிரபரணி ஆற்றில் விழுந்து உயிர் தியாகம் செய்த 17 தியாகிகளுக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பாகஅதன் நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமையில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது

மூவேந்தர் மருதம் முன்னேற்றக் கழகத்தினர் தாமிரபரணி ஆற்றில் இறங்கிபோராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு தாமிரபரணி ஆற்றில் நினைவுத்தூண் எழுப்ப வேண்டும் என்றும், தமிழக அரசு அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி வீர முழக்கமிட்டனர்.

தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் இறங்கி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் செல்லப்பா, சட்ட ஆலோசகர் முத்துக்குமார் , மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன்னுச்சாமி, தென்மண்டல மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் பால்துரை, மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பவுல்ராஜ், தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதா, கோவில்பட்டி ஒன்றிய மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி, கோவில்பட்டி நகர செயலாளர் ஆகாஷ் , துணை செயலாளர்செல்லத்துரை, உட்பட ஏராளமானார் கலந்து கொண்டுஊதிய உயர்வு கேட்டு உயிர் நீத்ததேயிலை தோட்ட தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினார்
முன்னதாககோவில்பட்டி
எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள
வீரன் சுந்தரலிங்கனார் முழு உருவ சிலைக்குமூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து அங்கிருந்து 20 வாகனங்களில் 300க்கும் மேற்பட்டோர்வாகனத்தில் பேரணியாக சென்றனர்







