தொழில் முனைவோர் கருத்தரங்கம்
Oplus_16777216
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளர் விஜயன் தலைமை தாங்கினார். முதல்வர் அண்ணாமலைசாமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக முனைவர் ஆனந்த் கலந்துகொண்டு, Franchise vs ஸ்டார்டிப் என்ற தலைப்பில் மாணவர்களுக்காக வழிகாட்டும் உரை நிகழ்த்தினார். தொழில்முனைவோருக்கான புரிதல்களை ஏற்படுத்தும் விதமாக, உரையுடன் கூடிய கலந்துரையாடலும் நடைபெற்றது.

மாணவர்களுக்கு ஊக்கம் வழங்கும் விதமாக, விருந்தினர் பரிசுகளையும் வழங்கினார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகளை, தொழில் முனைவோர் கழக ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார், வரதராஜம்மாள், ரவினா மாரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.







