கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
கோவில்பட்டி புத்துயிர் இரத்ததானகழகம், மக்கள்நலம் அறக்கட்டளை, கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவற்றின் சார்பாக கோவில்பட்டி ஆயிரவைசிய தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு புத்துயிர் இரத்ததானக்கழகச்செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். இந்திய கலாச்சார நட்புறவு கழக மாவட்ட துணைச்செயலாளர் அபிராமிமுருகன் முகாமினை துவக்கி வைத்தார்.
முகாமில் கலந்துகொண்ட 40 பேருக்கு கண்விழி பரிசோதகர் கணேஷ்வரி கண் பரிசோதனை செய்தார். 16 பேர் மேல்சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

முகாமில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, ஆவல்நத்தம் லட்சுமண், கட்டிட தொழிலாளர்கள் சங்கம் உத்தண்டராமன், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில்குமார், மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார் மருத்துவக்குழு ஒருங்கிணைப்பாளர் ராமு கண்ணன், செவிலியர் யோகலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.







