கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று மாலை ஆனி திருமஞ்சன உற்சவம் நடக்கிறது
அபிஷேகப் பிரியரான சிவ பெருமானுக்கு தினந்தோறும் அபிஷேகம் நடத்தப்படும். ஆனால் சிவ வடிவங்களில் ஒன்றான நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு 6 முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும்.

இந்த ஆறு அபிஷேகங்களில் ஒன்று தான் ஆனி மாதத்தில் நடைபெறும் திருமஞ்சன உற்சவம். கோவில்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆனி உத்திர திருமஞ்சன உற்சவம் நடக்கிறது,. நிகழச்சிகள் விவரம் வருமாறு:-
மாலை 5.45 மணி :கும்ப பூஜை, ஹோமம்
மாலை 6.15 மணி: சாயரட்சை பூஜை
மாலை: 6.35 மணி :சிவகாம அபிகா உடனுறை நடராஜ பெருமான் யதாஸ்தானம் எழுந்தருளி அபிஷேக மண்டபம் எழுந்தருளல்.
மாலை: 6.40 மணி: ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம்
மாலை: 7.30 மணி: சிறப்பு அலங்காரம், நடன தீபாராதனை
உபசாரம் நடை பெற்று பிரசாதம் வழங்குதல்.
இரவு: 8.15 மணி: சுவாமி யதாஸ்தானம் வந்தருளல். நடக்கிறது.

ஆனி மாதம் நடக்கும் திருமஞ்சனத்தை தரிசனம் செய்தால் செல்வ வளம், மகிழ்ச்சி, துன்பங்களில் இருந்து விடுதலை, சிவ பெருமான் முழுமையான அருள், திருமண வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு, பண நெருக்கடி மற்றும் உடல் உபாதைகளுக்கு தீர்வு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.







