ரோட்டரி சங்க மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கும் விழா; கோவில்பட்டியில் நடந்தது

ரோட்டரி சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு வருடமும் மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, தென்காசி,திருநெல்வேலி,விருதுநகர்,சிவகங்கை, ராமநாதபுரம் ,தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்கங்களில் ரோட்டரி சேவைகளை சிறப்பாக செய்தமைக்கு 500 க்கும் மேற்பட்ட விருதுகள் பல்வேறு தலைப்புகளில் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அவார்ட்ஸ் சேர்மன் விநாயகா ரமேஷ் தலைமை தாங்கினார்.

ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கே.வி.ராஜேந்திரன், ஜே.கே.குமார் ஷாஜகான், நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் தாமோதரன் கண்ணன் ரோட்டரி இறை வணக்க பாடலை பாடினார், அவார்ட்ஸ் செகரட்டரி சீனிவாசன் 4 வழி சோதனைகளை வாசித்தார்.
முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக் பத்மராஜ் விருதுகள் வழங்கும் விழா குறித்து நோக்கவுரையாற்றினார். ரோட்டரி 3212 மாவட்ட ஆளுநர் மீரான்கான் சலீம்,முன்னாள் மாவட்ட ஆளுநர் இதயம் முத்து ஆகியோர் கலந்து கொண்டு ரோட்டரி சங்கங்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினர்.

வருங்கால ஆளுநர்கள் தினேஷ் பாபு, காந்தி, எபனேசர் பென்சம், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், தலைமை உதவி ஆளுநர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி, கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலாளர் ராஜமாணிக்கம் உள்பட 1000-க்கும் மேற்பட்ட ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.







