மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய மாநாடு முடிவுகள் விளக்க கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி நகரக்குழு சார்பில் 24 வது அகில இந்திய மாநாடு அரசியல் ஸ்தாபன முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் கோவில்பட்டி பாரதி இல்லம் அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். நகரச்செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரக்குழு உறுப்பினர்கள் முருகன், அந்தோணிச் செல்வம், கண்ணன், கதிர்வேல், தினேஷ்குமார், பாலசுப்பிரமணியன், ஜானகி, வேலுச்சாமி மற்றும் கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.








