கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி கூடுதல் ஆக்கி பயிற்சியாளராக ஹானஸ்ட் ராஜ் நியமனம்
கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள ஆக்கி சிறப்பு விளையாட்டு விடுதி கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது இங்கு 30 கல்லூரி மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள்
இந்த விடுதி மேலாளராக மாவட்ட விளையாட்டு அதிகாரி ரத்தினராஜ் மற்றும் தலைமை பயிற்சியாளராக முத்துக்குமார் செயல்பட்டு வருகிறார்கள்.

இங்கு தங்கி பயிற்சி பெற்று வரும் ஆக்கி வீரர்கள், சர்வதேச வீரர்களாகவும் விளையாட்டின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் 20க்கும் மேற்பட்டவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்
இந்த சிறப்பு விளையாட்டு விடுதியில் மேலும் பல வீரர்கள் சர்வதேச அளவில் சாதனை புரிவதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூடுதல் சிறப்பு ஆக்கி பயிற்சியாளரை நியமனம் செய்துள்ளது.
திருநெல்வேலி விளையாட்டு விடுதியில் ஆக்கி பயிற்சியாளராக செயல்பட்ட ஹானஸ்ட் ராஜ் தற்போது கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியில் கூடுதல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளார்.

புதிய ஆக்கி பயிற்சியாளருக்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாகவும் கோவில்பட்டி மூத்த ஆக்கி வீரர்கள் சார்பாகவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளர் ரத்தினராஜ் , தலைமை பயிற்சியாளர் முத்துக்குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா, முன்னாள் ஆக்கி வீரர் மோகன், உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி ராஜன் , முருகன், மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திரன், சுரேஷ் குமார், சிவானந்த, ஆக்கி பயிற்சியாளர்கள் வேல்முருகன், ஈஸ்டர், மணிவண்ணன், காளிதாஸ், சுரேஷ்குமார், ஆகியோர் கலந்துகொண்டு கூடுதல் பயிற்சியாளரை வரவேற்றனர்







