போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு மருத்துவ பரிசோதனை
போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்தவகையில். போதைப்பொருளுக்கு அடிமையான நடிகர் – நடிகைகளை போலீசார் தற்போது கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட பிறகு இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.
நடிகர் கிருஷ்ணா, கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று மாலை நடிகர் கிருஷ்ணா திடீரென்று போலீசார் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.

. ஒருபக்கம் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே, மற்றொரு பக்கம் பெசன்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். உயர் ரக போதைப்பொருள் பயன்படுத்தும் அளவுக்கு தனது உடல் ஒத்துழைக்காது எனவும் இரப்பை பிரச்சினைகள் இருப்பதாகவும் போலீசாரிடம் கிருஷ்ணா கூறியதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே, நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்களிடம் சங்கேத வார்த்தைகளில் (Code word) தனது நண்பர்களிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அதற்கும் போதைப்பொருளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக நடிகர் கிருஷ்ணாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது







