இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித் தொகை
கோவில்பட்டி அருகே சமத்துவபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜஸ்வர்யா. இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் படித்து வருகிறார்.

இவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி ஜீவா இல்லத்தில் நடந்தது.
நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாணவி ஐஸ்வர்யாவின் ஒரு செமஸ்டருக்கான கல்வி கட்டணத்தை அவருக்கு வழங்கினார். மேலும், நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் பாபு, நகர உதவி செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன், நகர பொருளாளர் சீனிவாசன் ,நகரக்குழு உறுப்பினர் செல்லையா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேதுராமலிங்கம், ரெங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்







