சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும்; மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


ம.தி.மு.க.,வின் 31வது பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் இன்று(ஜூன் 22) நடைபெற்றது.
கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளார் துரை வைகோ, ம.தி.மு.க., அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில்வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். வைகோ, துரை வைகோ ஆகியோருக்கு ஆள் உயர மாலை அணிவிக்கப்பட்டது
கூட்டத்துக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
*தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதற்கு ஏற்ற வகையில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும்.

*2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
ம.தி.மு.க., முன்னாள் எம்.பி., கணேசமூர்த்திக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஈரோட்டில் அவர் வசித்த வீதிக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும்
*பாண்டியாறு மோயாறு இணைப்புத்திட்டம் செயல்படுத்த வேண்டும்,
*காளிங்காராயன் வாய்க்கால் மாசுபாட்டுக்கு தீர்வு காண வேண்டும் மேற்கண்டவை உட்பட 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







