தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் : ஐஎன்டியூசி செயற்குழு வலியுறுத்தல்
தூத்துக்குடியில் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியூசி) தலைமையகத்தில் மாவட்ட தலைவர் ராஜகோபாலன் தலைமையில் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தேசிய அமைப்புச் செயலாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். துறைமுக சங்கத்திலிருந்து தலைவர் கருப்பசாமி, மைக்கேல், சங்கர், சிவராஜ், ஸ்டீபன், குட்டிராஜ், சேர்மதுரை, சேகர், பால்ராஜ், சண்முகையா முருகேசன், உப்பள சங்கம் செயலாளர் ஸ்டாலின், கண்ணன் சாமுவேல், குட்டி, பண்டாரம், ரோசிட்டா, இந்திய உணவுக் கழக சங்கம் வீரையோ, காசி, பாண்டி, முருகன், பெரியசாமி, ரமேஷ், பாஸ்கர், சிவகுமார், முத்துப்பாண்டி, உதயசூரியன், ரயில்வே சங்கம் பாலகிருஷ்ணன், பாலசுப்ரமணியம், முருகன், கோவில்பட்டி ராஜசேகர், மின்சார தையல் சங்கம் மனோகர், டிசிடபிள்யூ சங்கம் முருகன், மற்றும் மாரிமுத்து, சர்தார், வரதராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு, வருங்கால வைப்பு நிதி, பென்ஷன், மருத்துவ உதவி, விபத்து கால நஷ்டஈடு, கிராஜுவிட்டி வழங்க வேண்டும்.
*அரசாங்கம் நியமிக்கின்ற குறைந்தபட்ச சம்பளம் என்பது பொருத்தமாக இல்லை அந்த சம்பளத்திற்கு யாருமே வேலைக்கு வருவதில்லை உதாரணமாக கொத்தனார்களுக்கு 450 ரூபாய் என்றும் சித்தாளுக்கு 290 என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள் ஆனால் நடைமுறை கொத்தனார் 1000 லிருந்து 1300 வரையும் சித்தாளுக்கு ரூபாய் 500 இதுதான் எதார்த்த நிலை.

*தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலிப் பணியிடத்தில் சுமார் 40,000 தொழிலாளர்கள் தின கூலிகளாக பணியாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள் பணியின் போது ஏற்படுகின்ற விபத்து மற்ற காரணங்களால் பாதிக்கப்படுகின்ற பொழுது தொழிலாளர்களுடைய குடும்பம் தெருவில் நிற்கதியாக நிற்கின்றது. ஆகையால் தொழிலாளர்களை நிரந்தப்படுத்தாமல் விட்டாலும் கூட அனைத்து சட்டரீதியான சலுகைகள் கிடைக்க அரசாங்கம் ஆவணம் செய்ய வேண்டும்.
*தமிழகமெங்கும் டாஸ்மாக்கில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் பல ஆண்டு காலம் பணியாற்றியும் டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் உடனடியாக அமல்படுத்த வேண்டும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றிய துறைமுகத்தில் இன்று புதிய நிரந்தர வேலை என்பது அறவே இல்லை மாறாக அனைத்து பிரிவுகளிலும் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றனர் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எந்த விதமான பணி பாதுகாப்பும் இல்லை இதை உடனடியாக துறைமுக சபை நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







