100-க்கும் மேற்பட்ட யோகா முகாம்கள் நடத்திய கோவில்பட்டி என் எஸ் எஸ் திட்ட அலுவலர்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹே புல்ட் என்ற அமைப்பு உலக அளவில் மக்களைஒன்றிணைத்து 169 நாடுகளில் இருந்து கலந்து கொண்டு யோகாவில் உலக சாதனை படைக்கப்பட்டது.

ஒரு உலகம் ஒரு உடல் என்ற அரசின் அறிவிப்புக்கு ஏற்ப இச்சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் கோவில்பட்டி என் எஸ் எஸ் திட்ட முன்னாள் அலுவலர் ரெ. சுப்பா ராஜூ உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக யோகா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

தற்போது யோகாஉலக சாதனை நிகழ்வில் கோவில்பட்டியில் இருந்து கலந்துகொண்ட அவர் அதற்கான சான்றிதழ் பெற்றுள்ளார். இவர் மேலும் பலரை யோகாவில் இணைத்துள்ளார். இவர் 100-க்கும் மேற்பட்ட யோகா முகாம்களை என். எஸ் .எஸ் மாணவர்களுக்கு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது







