உண்ணாமலை கலை கல்லூரி மாணவ,மாணவிகள் யோகா நிகழ்ச்சி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்று யோகா செய்தனர். மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் வகையில், பல்வேறு யோகாசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி கலந்து கொண்டு, யோகாவின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு உரையாற்றினார். யோகா என்பது ஒரு உடல் பயிற்சி மட்டும் அல்ல; அது மன அமைதி மற்றும் ஒழுங்கான வாழ்வை உருவாக்கும் வழிமுறை என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனை படி நடத்தப்பட்டது. விவேகானந்தா கிராமப்புற வளர்ச்சி திட்டத்தின் துணை செயலாளர் பரமக்குரு மற்றும் யோகா பயிற்சியாளர் வேலுச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்







