சிவகாசி கல்லூரியில் சர்வதேச யோகா தினம்
சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்கு கல்லூரி செயலர் ராகவன் தலைமை தாங்கினார்.கல்லூரி முதல்வர் குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்லூரி துணை சேர்மன் பிருந்தா ராகவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை பேராசிரியர் விஜயகுமார் மற்றும் தங்கமாரியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்







