• October 22, 2026

கோவில்பட்டியில் பழுதான செல்போன் விற்ற கடைக்காரர் ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

 கோவில்பட்டியில் பழுதான செல்போன் விற்ற கடைக்காரர் ரூ.30 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

கோவில்பட்டியைச் சேர்ந்த கீதா என்பவர் ஒரு மொபைல் கடையில் ரூபாய் 3,055 மதிப்புள்ள செல்போன் ஒன்று வாங்கியுள்ளார். வாங்கிய ஒரு வாரத்திற்குள்ளாகவே மொபைல் வேலை செய்யாததால் கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்துள்ளார். 

இது சிறிய பிரச்சினை தான். உடனடியாக சரி செய்து தருகிறோம் என்று சொல்லி சரி செய்து கொடுத்து விட்டார்கள். 

ஆனால் மீண்டும் செல்போன் சரியாக வேலை செய்யாததால் கடைக்காரரை கீதா அணுகியுள்ளார். மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான கீதா தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மொபைல் கடையின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பழுதான மொபைலின் விலையான ரூபாய் 3,055 மற்றும் ரூபாய் 30,000 நஷ்ட ஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூபாய் 5,000 ஆக மொத்தம் ரூபாய் 38,055-ஐ இரு மாத த்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *