“அரசியலமைப்பை பாதுகாப்போம்”: காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரம்,துண்டு பிரசுரம் விநியோகம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரசியலமைப்பை பாதுகாப்போம் என்று தெருமுனை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி பாண்டியன், அருண்பாண்டியன், பிரேம்குமார், சுப்புராயிலு, பெத்துராஜ்,மாரிமுத்து ஆகியோர் பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

கூட்டத்திற்கு தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.மாநில பேச்சாளர் குமரி மகாதேவன் கலந்து கொண்டு அரசியலமைப்பு பாதுகாப்போம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஐஎன்டியுசி ராஜசேகரன், சிவபிரகாசம்,சண்முகராஜா,மாவட்டச்செயலாளர் துரைராஜ்,சமூக ஊடகபிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன், பொதுக்குழு உறுப்பினர் உமாசங்கர், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் அருள்தாஸ்,மாவட்ட பொறுப்பாளர் விஜய்,இளைஞர் காங்கிரஸ் தொகுதி துணை தலைவர் அரவிந்த்,காங்கிரஸ் நிர்வாகிகள் சண்முகவேல்,சந்திரன், பிச்சைக்கனி, பாலமுருகன்,தர்மர், அருணாச்சலம், பிரபாகரன்,அய்யாதுரை, ஜெகன்,முருகேசன், பழனிசாமி,மகேந்திரன், ராஜபாண்டியன், பங்காருசாமி, முருகன்,குருசாமி, மாரிமுத்து, நல்லமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்









