கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தினம்


கோவில்பட்டி கிளை விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்றத்திட்டம் சார்பாக ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம், என்ற அடிப்படையில் உலக யோகா தினம் இன்று கோவில்பட்டியில் நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை கேந்திர அன்பர் முத்துசெல்வி,ஆனந்தவள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்.

லக்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி மாணவர் சூர்யகுமார் இறைவணக்கம் பாடினார்,யோகா குழு உறுப்பினர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார். நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் இரத்தினராஜா தலைமையுரை ஆற்றினார், தலைமை ஆசிரியர் அருணாச்சலம் வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து கேந்திர அன்பரும், யோகப்பயிற்ச்சியாளருமான வேலுச்சாமி யோகசனம் செய்து காண்பித்தார்.
நிகழ்ச்சியில் 7 பள்ளிகளிலிருந்தும், 3 கல்லூரிகளில் இருந்தும் மாணவ மாணவியர்களும், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கலந்து சிறப்பு விருந்தினர்களுக்கு யோகா குழுவினர் மூலமாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.கேந்திர யோகா குழு உறுப்பினர் ராஜசங்கர் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திரம் கிராம முன்னேற்றத்திட்டம் இணை செயலாளர் மற்றும் கோவில்பட்டி கிளை பொறுப்பாளருமான பரமகுரு செய்திருந்தார்.







