கோவில்பட்டியில் உலக யோகா தின கொண்டாட்டம்
கோவில்பட்டியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பாக மந்திதோப்பு ரோட்டில் அமைந்துள்ள யோகா மையத்தில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பத்மாசனம்,பக்ஷிமோத்தாசனம், உசட்ராசனம், பாதகஸ்தாசனம் போன்ற பல்வேறு ஆசனங்களை செய்தனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி அரசு மருத்துவமனை அரசு யோகா மருத்துவர் திருமுருகன் கலந்து கொண்டு மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு யோகா மற்றும் இயற்கை உணவு பற்றிய நன்மைகள் குறித்து பேசினார்.

ஆசிரியை பாரதிமீனாள், ஹீலிங் பயிற்சியாளர் புஷ்பராணி,பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசகர் சண்முகவேல் நன்றி கூறினார்.விழா ஏற்பாட்டினை ராஜ் யோகா ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் நிறுவனர் மற்றும் யோகா பயிற்சியாளர் நாகராஜன் செய்திருந்தார்.








