நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தாம்பரத்தில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20691) ஜுன் 22-ந்தேதி முதல் ஜுலை 21 ந் தேதி வரை நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்
ஜுன் 23 ந் தேதி முதல் ஜுலை 22 ந் தேதி வரை அந்தியோக்கியா எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20692) திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு சென்னை தாம்பரம் செல்லும்.
ஜுன் 21 ந் தேதி முதல் ஜூலை 22 ந் தேதி வரை சென்னையிலிருந்து நாகர்கோவில் வருகிற 3 ரெயில்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நடைபெறுகிற யார்டு பராமரிப்பு பணி காரணமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மாலையில் புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்து பின்னர் சென்னை தாம்பரம் மற்றும் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடைகிறது.
இவ்வாறு தென்னக ரெயில்வே அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.







