கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவர் ஏ. பி. கே. பழனி செல்வம் காலமானார்
Oplus_16777216
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தலைவராக ஏபிகே பழனி செல்வம் இருந்தார். இவரது தலைமையிலான நிர்வாக குழுவினர் திறம்பட பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக ஏபிகே பழனி செல்வம் இன்று மாலை காலமானார். அவரது உடல் 1 வது செக்கடி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நாளை வியாழக்கிழமை வைக்கப்படுகிறது.
ஏபிகே பழனி செல்வம் மறைவு செய்தி அறிந்ததும் உறவின்முறை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஏபிகே பழனி செல்வம் இறுதிச்சடங்கு நாளை ( வியாழக்கிழமை) மாலை நடக்கிறது. நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வந்த பழனிச்செல்வம், சமீபத்தில் பிரமாண்டமான முறையில் மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலை உருவாக்கி கும்பாபிஷேகம் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.







