15வயதுக்கு உட்பட்டோருக்கான ஆக்கி போட்டி: டாக்டர் அம்பேத்கர் பி அணிக்கு வெற்றிக்கோப்பை
கோவில்பட்டி ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பாக 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆக்கி போட்டி கோவில்பட்டி வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.
போட்டியில் ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் அம்பேத்கர் ஏ மற்றும் பி,அசோக் நினைவு ஆக்கி அணி கோவில்பட்டி ஆக்கி கிளப் செல்லையா ஆக்கி அகடமி ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டன
லீக் மட்டும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன அரை இறுதிப் போட்டிக்கு டாக்டர் அம்பேத்கர் ஏ மற்றும் பி அணியினரும் ராஜீவ் காந்தி விளையாட்டு கழக மற்றும் கோவில்பட்டி ஆக்கி கிளப் அணியினர் தகுதி பெற்றனர்.

இன்று திங்கள் கிழமை மாலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாக்டர் அம்பேத்கர் பி அணியினர் ராஜீவ் காந்தி விளையாட்டுக்கழக அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
தோல்வியடைந்த ராஜீவ் காந்தி விளையாட்டு கழக அணி இரண்டாவது இடம் பெற்றது.
முன்னதாக மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் அம்பேத்கர் ஏ அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி ஆக்கி கிளப் அணியினரை வீழ்த்தி மூன்றாவது இடத்தை பெற்றது
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முன்னாள் தேசிய ஆக்கி வீரரும் ஓய்வு பெற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளருமான நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளும் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தார். ராஜீவ் காந்தி விளையாட்டு கழக துணைச் செயலாளர் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்.ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பொருளாளர் காளிமுத்து பாண்டியராஜா உடற்கல்வி ஆசிரியர்கள் சுரேந்திரன் சுரேஷ்குமார் சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் நடுவர்களாக மாரியப்பன் அருண்குமார் சண்முகப்பிரியா பிரேம் ஆகியோர் செயல்பட்டனர் இறுதியில் நெட் ஆப் தூத்துக்குடி துணைச் செயலாளர் மாரியப்பன் நன்றி கூறினார்







