கோவில்பட்டியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
Oplus_16908288
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது.
அன்றைய தினத்தில் 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியதை நினைவுபடுத்தும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
அதன்படி இன்று (ஏப்.13) குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.
கோவில்பட்டியில் இன்று காலை புனித சூசையப்பர் திருத்தல குருக்களும், இறைமக்க ளும், தூய பவுலின் ஆல யம் வந்தடைந்ததைத் தொடர்ந்து இரு சபை அருட்தந்தையர்களும்
இணைந்து குருத்தோலைகளை மந்தி ரித்து இறைமக்களுக்கு வழங்கினர்.
பின்னர் இறை மக்கள் புனித சூசையப்பர் (ஆர்சி) திருத்தல பங்குத் தந்தை சார்லஸ் அடிகளார் உதவி பங்குத் தந்தை அருண்குமார் அடி களார், தூயலின்(சிஎஸ்ஐ) பவு ஆலய
முதன்மை குரு சாமுவேல் அடிகளார் உதவி குருக்கள் தலைமை யில் இறை மக்கள் கையில் குருத்தோலை ஏந்திய வாறு ஓசன்னா கீதம் பாடி யபடி பவனியாக சென்றனர்.
புது ரோடு,கடலையூர்மெயின் ரோடு, மில் தெரு, சாத்தூர் மெயின் ரோடு வழியாக புனித சூசையப்பர் திருத்த லம் வந்தடைந்தனர். அங்கு இரு சபை அருட்தந்தையர்களும் இறை பிரசங்கம் செய்த பின்னர் தூய பவுலின் ஆலய குருக்களும் இறைமக்களும் சிஎஸ்ஐ ஆலயம் சென்றனர்.
தொடர்ந்து புனித சூசையப்பர் திருத்த லத்தில் அருட்தந்தையர் திருப்பலி நிறைவேற்றினர்.









