கோவில்பட்டி திருவிழாவில் ராட்டினங்கள் இயக்க திடீர் தடை; பொதுமக்கள் ஏமாற்றம்




கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவன நாத சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் பொழுதுபோக்கு வசதிக்காக விதவிதமான ராட்டினங்கள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த 7ம் தேதி முதல் இந்த ராட்டினங்கள் செயல்பட தொடங்கியுள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை நேரத்தில் குடும்பம் குடும்பமாக கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் ராட்டினங்களில் சுற்றும் ஆசையில் அங்கு கூடி னார்கள்.
ஆனால் அவர்களை ஏமாற்றும் விதத்தில் மாலை 6 மணி முதல் ராட்டினங்கள் செயல்படவில்லை. இது பற்றி விசாரித்த போது முறையான தடையின்மைச் சான்று வாங்கவில்லை என்ற புகார் காரணமாக ராட்டினங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது தெரிய வந்தது.
ராட்டினங்கள் முறையாக அமைக்கப்படவில்லை, ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின் வயர்கள் செல்வதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்திருக்கக் கூடிய நிலையில் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது
இதனால் ராட்டினங்கள் ஏறுவதற்கு ஆர்வமாக வந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ராட்டினங்கள் இயக்கப்படாததால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் திருவிழாவின் இறுதி நாட்கள் களை இழந்து உள்ளன.


