தங்கம் விலை தொடர்ந்து சரிவு ; இன்று பவுனுக்கு ரூ.480 குறைந்தது

ஒரு மாதமாக தொடர்ந்து விலை உயர்ந்து வந்த தங்கம், கடந்த ஓரிரு நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 3-ந்தேதி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.8 ,560-க்கும், பவுன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.
4-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.160 குறைந்து, ரூ.8 ,400-க்கும், ஒரு பவுன் ரூ.1,280 குறைந்து ரூ.67 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. 5-ம் தேதி பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.8,310-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.66,280க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.25க்கு குறைந்து ரூ.8,285க்கு விற்பனையானது.
இந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் ரூ.65,800-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.8,225-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


