பகத்சிங் நினைவு நாள்: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததானம்
கோவில்பட்டியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் நகர, தாலுகா குழு சார்பில் மாவீரன் பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ரத்ததான முகாமிற்கு இளைஞர் பெருமன்றம் நகரச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.முகாமை கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன்,தாலுகா துணைச் செயலாளர் பாபு,இளைஞர் பெருமன்றம் மாநிலத் துணைத் தலைவர் ரஞ்சனி கண்ணம்மா,மாவட்டச் செயலாளர் சுரேஷ்குமார்,சிபிஐ நகர உதவிச்செயலாளர் அலாவுதீன்,ஒன்றியக்குழு உறுப்பினர் ரெங்கநாதன்,மாதர் சங்கம் நகரச் செயலாளர் விஜயலட்சுமி,இளைஞர் பெருமன்றம் உறுப்பினர்கள்,கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.







