பகத்சிங் நினைவு தினம்: உருவப்படத்திற்கு மரியாதை
கோவில்பட்டியில் மாவீரன் பகத்சிங் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு பகத்சிங் உருவப்படத்திற்கு கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகி நல்லையா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மாவீரன் பகத்சிங் ரத்ததானக் கழக நிர்வாகிகள் காளிதாஸ், லட்சுமணன், சண்முகராஜ்,காங்கிரஸ் கட்சி துரைராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்துகுமார்,திருவள்ளுவர் மன்ற தலைவர் கருத்தப் பாண்டி, உலக திருக்குறள் கூட்டமைப்பு முத்து செல்வம், மக்கள் நீதி மையம் ரமேஷ், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார், இரட்டைமலை சீனிவாசனார் இயக்க செல்வக்குமார், தர்மம் வெல்லும் அறக்கட்டளை பூலோகப்பாண்டியன், ஞானம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







