பள்ளி மாணவர்களுக்கு வானவியல் செயல்விளக்க பயிற்சி


தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட அஸ்ட்ரோ கிளப்புகள் மூலம் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது.
அந்த வகையில் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த வானவியல் குறித்த செயல் விளக்க பயிற்சிக்கு தலைமை ஆசிரியை ராணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி கலந்துகொண்டு தொலைதூரப் பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் வானவியல் குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.
இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட்டு வியந்தனர். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை பராசக்தி நன்றி கூறினார்.
