சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்
நேற்று காலை 10மணியளவில் கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கி அருகே வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் தலைமையில் இந்த இயக்கம் நடைபெற்றது, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை தலைவர் தேன்ராஜா அனைவரையும் வரவேற்றார்,
காவல்துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன், அந்த வழியாக இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினார். ஆய்வாளர் கவின்ராஜ் , தொழிலதிபர் அருண் பேக்கரி மாடசாமி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.,
மேலும் போக்குவரத்து விதிமுறை பற்றி வாகன ஓட்டிகளுக்கு காவல்துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் எடுத்துரைத்தார். வட்டார போக்குவரத்து வகித்தனர்,இரு சக்கர வாகன ஓட்டிகள் ,பேருந்து பயணிகள்,மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது,
நிகழ்வில் தொண்டு நிறுவன நிர்வாகிகள் முத்து மாரியப்பன், இராம சுப்ரமணியன்,மேற்பார்வையாளர் மாடசாமி,போக்குவரத்து காவலர்கள்,ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், மற்றும் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.







