• May 25, 2025

‘தி ராஜா சாப்’ படத்தில் எனது கதாபாத்திரம் ஆச்சரியப்படுத்தும்’- நிதி அகர்வால்

 ‘தி ராஜா சாப்’ படத்தில் எனது கதாபாத்திரம் ஆச்சரியப்படுத்தும்’- நிதி அகர்வால்

ஈஸ்வரன்’, ‘கலக தலைவன்’, ‘பூமி’ உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நிதி அகர்வால். தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். அதன்படி, தற்போது இவர் பிரபாஸ் நடிக்கும் தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார். பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது.

]தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,  ஏப்ரல் மாதம் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்தநிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து நடிகை நிதி அகர்வால் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,நான் பொதுவாக கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று மக்கள் நினைக்கிறார்கள். ‘தி ராஜா சாப்’ படம் மக்களிடம் உள்ள என்னை பற்றிய சிந்தனையை மாற்றும் என்று நம்புகிறேன். ‘தி ராஜா சாப்’ படத்தில் எனது கதாபாத்திரம் நான் வழக்கமான நடிக்கும் கதாபாத்திரங்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும். அது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்’ என்றார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *