கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் இருந்து நாளை முதல் அனைத்து பஸ்களும் இயக்கப்படும்

கோவில்பட்டி நகராட்சி அண்ணா பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது..
பேருந்து நிலையத்தின் ஒருபுறம் வேலை நடக்கும் சூழலில் மறுபுறம் பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த் பணிகள் தொடங்கி ஒரு மாதம் ஆகி இருக்கும் நிலையில் தற்போது பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெறுவதற்கு வசதியாக பேருந்துகள் இடம் மாற்றி நிறுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை நடைபெற்ற கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்த்த அலுவலர் மற்றும் பேருந்து உரிமையாளர்களின் சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன,
*அனைத்து பேருந்துகளும் நாளை (3-ம் தேதி) முதல் கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
*அண்ணா பேருந்து நிலையம் முன்புறம் பயணிகளை இறக்குவதற்கும் ஏற்றுவதற்கும் மட்டும் நிறுத்த வேண்டும்.
*இ.எம்.ஏ.ஆர்.மெயின் ரோட்டை ஒருவழிப்பாதையாக மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது
*. கூடுதல் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, விளாத்திகுளம் செல்லும் பேருந்துகள், இளையரசனேந்தல் ரோடு, இ.எம்.ஏ.ஆர். மெயின் ரோடு, மாதாங்கோவில் ரோடு பிரதான சாலை, வழியாக செல்ல வேண்டும்.
*கழுகுமலை, சங்கரன்கோவில், திருநெல்வேலி, தென்காசியில் இருந்து வரும் பேருந்துகள், பிரதான சாலை வழியாக நகருக்குள் வந்து, மீண்டும் இளையரசனேந்தல் சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
*தூத்துக்குடி, விளாத்திகுளம் மார்க்கங்களில் இருந்து கோவில்பட்டி வரும் பேருந்துகள், பூங்கா சாலை வழியாக வந்து பயணிகளை இறக்கிவிட்டு, இனாம் மணியாச்சி மேம்பாலம் வழியாக புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
*மினி பேருந்துகள் அண்ணா பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஸ்வீட் கடை முன்புறமும், மற்ற பேருந்துகள் மேற்கு பேருந்து நிலையத்திலும் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும்,
மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன,







