பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வீரர்களுக்கு கோவில்பட்டியில் வழியனுப்பு விழா
யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ் மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி மைதானத்தில் நாளை 3.1.2025 முதல் 7.1.2025 வரை நடத்துகிறது
இப் போட்டியில் 68 பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டு விளையாட உள்ளன. நடப்பு சாம்பியன் ஆன மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி பயிற்சி முகாம் முடிவடைந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் விழா கோவில்பட்டி எஸ் டி ஏ டி ஆக்கி மைதானத்தில் இன்று நடைபெற்றது
இவ்விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் முனைவர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் 18 வீரர்கள் கொண்ட மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வீரர்களை அறிவித்து சீருடைகளை தொழிலதிபர் செல்வகுமார் வழங்கி வழி அனுப்பி வைத்தார்.
வீரர்கள் வருமாறு கே ஆர் கல்லூரியில் இருந்து திவாகரன் (கோல்கீப்பர்), மனோஜ் குமார், (அணித்தலைவர்) வேல் ராகவன், ராமநாதன், நந்தகுமார், இசக்கிமுத்து, நா.அரவிந்த், கோவில்பட்டி அரசு கலைக் கல்லூரியில் இருந்து முரளி கிருஷ்ணன், பாலச்சந்தர் , நவீன் ராஜ்குமார், நிசி தேவ அருள் , மகேந்திரன் (கோல்கீப்பர்) நாகலாபுரம் அரசு கலைக் கல்லூரியில் இருந்து மதுபாலன், வி .அரவிந்த், முருகேசன், கோவில்பட்டி துரைசாமி மாரியம்மாள் கல்லூரியில் இருந்து சீனிவாசன் , விஷால், பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் இருந்து மனோரஞ்சித்,
அணி பயிற்சியாளராக கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி ஆக்கி பயிற்சியாளர் முத்துக்குமார், அணி மேலாளராக கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி ஆகியோரை வழி அனுப்பி வைத்தனர்.
இவ்விழாவில் கோவில்பட்டி கே ஆர் கலைக்கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முனைவர் ராம்குமார் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி பொறுப்பாளர்கள் மோகன்ராஜ் அருமை நாயகம், காளிமுத்து பாண்டிராஜா, தங்கராஜ், பெரியதுரை, உடற்கல்வி ஆசிரியர்கள் பாரதி ராஜன், சுரேஷ்குமார், முருகன், கிருஷ்ணமூர்த்தி, திருச்செல்வம், காளிதாஸ், அஸ்வின், ஆகியோர் கலந்துகொண்டனர்